ADDED : ஜூன் 07, 2025 04:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: தோட்டக்கலை, மலைப்பயிர்கள் துறை சார்பில் மதுரை வேளாண் கல்லுாரியில் தென்னை பராமரிப்பு, பூச்சி, நோய் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு கருத்தரங்கு நடந்தது.
தோட்டக்கலை துணை இயக்குநர் பிரபா திட்டங்கள் குறித்து பேசினார். தோட்டக்கலைத்துறைத் தலைவர் ஆனந்தன் தென்னை சாகுபடி தொழில்நுட்பங்கள், இணைப்பேராசிரியர் உஷாராணி பூச்சி, நோய் மேலாண்மை குறித்தும், வேளாண் வணிகத்துறை அலுவலர் சித்தார்த் தென்னையில் மதிப்பு கூட்டிய பொருட்கள் குறித்தும் பேசினர்.
பேராசிரியர்கள் ராஜமாணிக்கம், இயேசுராஜா தென்னையின் ரகங்கள், தாய்மரம் தேர்ந்தெடுத்தல் குறித்து பயிற்சி அளித்தனர். வேளாண் துணை இயக்குநர்கள் மெர்ஸி ஜெயராணி, சாந்தி பங்கேற்றனர். உதவி இயக்குநர் தமிழ்ச்செல்வி நன்றி கூறினார்.