/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'காருக்கு பதிலாக அரசு வேலை கொடுங்க ப்ளீஸ்'...
/
'காருக்கு பதிலாக அரசு வேலை கொடுங்க ப்ளீஸ்'...
ADDED : ஜன 17, 2024 07:07 AM
மதுரை : ''ஜல்லிக்கட்டு போட்டியில் ஜெயிக்கும் வீரர்களுக்கு கார் பரிசளிப்பதற்கு பதிலாக அரசு வேலை கொடுத்தால் நன்றாக இருக்கும்'' என மதுரை பாலமேட்டில் 14 காளைகளை அடக்கி முதல் பரிசாக முதல்வர் ஸ்டாலின் சார்பாக அமைச்சர் மூர்த்தி வழங்கிய காரை பெற்ற பிரபாகரன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் போட்டிகளில் காளைகளை அடக்கி வெற்றி பெறுகிறோம். ஆனால் எங்களுக்கு காரும் டூவீலரும் பரிசாக தரப்படுகிறது. அதனால் எந்த பயனும் இல்லை.
எங்களுக்கான வேலை வாய்ப்பு கேட்டு தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகிறோம். தயவுசெய்து ஜல்லிக்கட்டு போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு அவர்கள் அடக்கிய காளைகளின் அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்க அரசு உதவி செய்ய வேண்டும் என்றார்.

