/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தங்கம் கடத்தலில் கொலை சி.பி.சி.ஐ.டி.,விசாரணை உயர்நீதிமன்றம் உத்தரவு
/
தங்கம் கடத்தலில் கொலை சி.பி.சி.ஐ.டி.,விசாரணை உயர்நீதிமன்றம் உத்தரவு
தங்கம் கடத்தலில் கொலை சி.பி.சி.ஐ.டி.,விசாரணை உயர்நீதிமன்றம் உத்தரவு
தங்கம் கடத்தலில் கொலை சி.பி.சி.ஐ.டி.,விசாரணை உயர்நீதிமன்றம் உத்தரவு
ADDED : செப் 19, 2025 02:46 AM
மதுரை: தங்கம் கடத்தல் வழக்கில் தொடர்புடைய நபரை கடத்தி திருப்புல்லாணியில் கொலை செய்த வழக்கின் விசாரணையை ராமநாதபுரம் சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றி உத்தரவிட்டது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.
ராமநாதபுரம் நாகநாதபுரம் சீனி பாத்திமா தாக்கல் செய்த மனு: என் மகன் சையது அப்துல்லா. இவர் தங்கக் கடத்தலில் ஈடுபட்டதாகக்கூறி 6 கிலோ தங்கம், ரூ.30 லட்சத்தை 2023 ல் துாத்துக்குடி வருவாய் புலனாய்வு இயக்குனரக (டி.ஆர்.ஐ.,) அதிகாரிகள் பறிமுதல் செய்து அவரையும் கைது செய்தனர். மகன் உட்பட சிலர் மீது வழக்கு பதிந்தனர். தங்கக் கடத்தல், ஹவாலா பரிவர்த்தனைகளில் ஈடுபட்ட சிலர் மகனிடம் பணத்தை திருப்பித் தருமாறு கேட்டனர். மகனை 2025 மே 16 ல் சிலர் கடத்திச் சென்று திருப்புல்லாணியில் கொலை செய்தனர். திருப்புல்லாணி போலீசார் வழக்கு பதிந்தனர். சிலர் கைதாகினர்.
இக்கொலையில் தொடர்புடையவர்கள் செல்வாக்கு மிக்கவர்கள். போலீசார் முறையாக விசாரிக்கவில்லை. வழக்கு விசாரணையை சி.பி.ஐ., அல்லது சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றி உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஜின்னா ஆஜரானார்.
நீதிபதி பிறப்பித்த உத்தரவு: டி.ஆர்.ஐ., பதிவு செய்த வழக்கு ஆவணம், மனுதாரரின் மகன் மரணத்திற்கு காரணம் குறித்த விபரங்களை போலீசார் இதுவரை சேகரிக்கவில்லை. குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் மற்றும் இறந்தவர் இடையேயான வங்கி பரிவர்த்தனை அறிக்கையை விசாரணை அதிகாரி சேகரிக்கவில்லை. போலீசார் முறையாக விசாரிக்கவில்லை. வழக்கு விசாரணை ராமநாதபுரம் சி.பி.சி.ஐ.டி., போலீசாருக்கு மாற்றப்படுகிறது. டி.ஆர்.ஐ., பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி., விசாரிக்க வேண்டும். கொலைக்குப் பின்னால் உள்ள நபர்களை கண்டறிய வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்டார்.