நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : உலக மனச்சிதைவு தினத்தையொட்டி மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த பிராந்திய மையம் (சி.ஆர்.சி.) சார்பில் மனச்சிதைவு மாற்றுத்திறனாளிகளின் விழிப்புணர்வு மனித சங்கிலி மதுரையில் நடந்தது.
போக்குவரத்து உதவி கமிஷனர் அனிதா துவக்கி வைத்தார். மனச்சிதைவை எதிர்கொள்வது பற்றி டாக்டர் ஷீபாபேசினார். குழந்தைகளுக்கு விளையாட்டுப் போட்டி நடந்தது. பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை சி.ஆர்.சி. அமைப்பின் இயக்குனர் ஜெயசீலி புளோரா மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.