/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஜல்லிக்கட்டு வீரர் கலெக்டரிடம் புகார்
/
ஜல்லிக்கட்டு வீரர் கலெக்டரிடம் புகார்
ADDED : ஜன 20, 2024 05:06 AM
மதுரை: 'அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு போட்டியில் முதலிடம் அறிவித்ததை நிறுத்தி வைக்க வேண்டும்' என, இரண்டாம் இடம் பெற்ற அபிசித்தர் கலெக்டர் சங்கீதாவிடம் புகார் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லுாரில் கடந்த ஜன.17 ல் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடந்தன. இதில் கார்த்திக் என்பவர் 18 காளைகளை அடக்கி முதலிடம் பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
இப்போட்டியில் பங்கேற்ற சிவகங்கை மாவட்டம் பூந்தியைச் சேர்ந்த அபிசித்தர் 2ம் இடம் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அவர் கலெக்டரிடம் அளித்த மனு: நான் ஜன.17ல் நடந்த அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டில் இரண்டாவது சுற்றில் மாடுபிடி வீரராக கலந்து கொண்டேன். மூன்றாவது சுற்றுவரை களத்தில் இருந்து 11 மாடுகளை அடக்கியதாகக் கூறி வெளியேற்றப்பட்டேன். விழா கமிட்டியிடம் முறையிட்டபோது, கடைசி சுற்றில் வாய்ப்பு தருவதாகக் கூறினர். பின்பு கடைசி சுற்றில் இறங்கி 7 மாடுகளை பிடித்தேன்.
ஆனால் விழா கமிட்டி சகவீரரான கார்த்திக் 18 காளைகளை அடக்கியதாகக் கூறி முதல் பரிசை அவருக்கு அளித்தனர். எனக்கு தகுந்த நீதி கிடைக்கவில்லை. என்னைவிட கார்த்திக் என்பவர் ஒரு மாடு குறைவாகவே பிடித்து இருந்தார்.
இதற்கான காணொளி ஆதாரங்கள் உள்ளன. விழா கமிட்டியிடமும் ஆதாரம் உள்ளது. முறையாக விசாரித்து முதலிடம் பெற்றவரை அறிவிக்க வேண்டும். அதுவரை முதலிடம் என்று அறிவித்ததை நிறுத்தி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

