
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்:சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு பிரம்ம குமாரிகள் சார்பில் கோடிலிங்க தரிசனம், ராஜயோக தியானம் பற்றிய படவிளக்க நிகழ்ச்சி திரவுபதி அம்மன் கோயிலில் நடந்தது.
சுற்றிலும் பிரதிபலிக்கும் கண்ணாடியால் மூடப்பட்டு ஒருபுறம் திறக்கப்பட்ட அமைப்புக்குள் லிங்கங்கள் அனைத்தும் பன்முக பிரதிபலிப்பால் கோடிலிங்கங்கள் இருப்பது போன்று காட்சியளித்தன. இது காண்போரை பெரிதும் கவர்ந்தது. ராஜயோக தியானம் குறித்த கருத்துக்கள் படத்துடன் விளக்கப்பட்டன. ஒருங்கிணைப்பாளர்கள் விஷ்ணு பிரசாத், ஜெயஸ்ரீ ஏற்பாடுகளைச் செய்தனர்.