/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கண்மாய் நீர்வரத்து கால்வாய்களை காணோம்: குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குமுறல்
/
கண்மாய் நீர்வரத்து கால்வாய்களை காணோம்: குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குமுறல்
கண்மாய் நீர்வரத்து கால்வாய்களை காணோம்: குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குமுறல்
கண்மாய் நீர்வரத்து கால்வாய்களை காணோம்: குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குமுறல்
ADDED : ஜன 10, 2024 12:50 AM
திருப்பரங்குன்றம் : 'கண்மாய் நீர்வரத்து கால்வாய்களை காணோம். ஆக்கிரமிப்புக்களை அகற்ற வேண்டும். விவசாயம், விவசாயிகள் காப்பாற்றப்பட வேண்டும்' என குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் பேசினர்.
திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் தாசில்தார் அனிஸ் சத்தார் தலைமையில் நடந்தது. துணை தாசில்தார் புவனேஸ்வரி முன்னிலை வகித்தார்.
விவசாயிகள் மூர்த்தி, மாரிச்சாமி, லட்சுமணன், ரமேஷ் பேசியதாவது: தென்கால் கண்மாயிலிருந்து பசுமலை பெராக்கா நகர் பாசன கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. கால்வாய் இருந்ததற்கான அடையாளமே தெரியவில்லை. கால்வாயை காணோம். 120 ஏக்கர் நிலங்கள் பாதிக்கப்படுகின்றன.
அரசு புறம்போக்கு இடங்களில் நீர் வரத்து கால்வாய்கள், ஓடைகளை ஒட்டியுள்ள பட்டா இடங்களை பதிய வருபவர்களிடம் கால்வாய்களை ஆக்கிரமிக்கக்கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்குமாறு பத்திரப்பதிவுத்துறைக்கு கடிதம் கொடுக்க வேண்டும். மாடக்குளம் கண்மாயிலிருந்து துரைச்சாமி நகர் வழியாக கிருதுமால் நதி வரையுள்ள நீர்வரத்து கால்வாய் பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. நிலையூர் பெரிய கண்மாய் மறுகால் பாய்ந்து சொக்கனாம்பட்டி உள்ளிட்ட கண்மாய்களுக்கு தண்ணீர் செல்லும் கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ஏற்குடி அச்சம்பத்து முருகன் கோயில் அருகே நீர்வரத்து கால்வாய், மெகா குப்பை தொட்டியாக மாறி வருகிறது. திருப்பரங்குன்றம் பாசன கண்மாய்களின் நீர்வழிப்பாதைகள் அனைத்தும் முட்புதர்களாகவும், பல இடங்களில் மேடு, ஆக்கிரமிப்புகள் உள்ளதாலும் மழைக்காலங்களில் மழை நீர் செல்ல முடியாத அளவிற்கு தடைபடுகிறது என்றனர்.
தாசில்தார்: அனைத்து கோரிக்கைகளும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். வருவாய்த் துறை சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். நீர் வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்புகள் சர்வே செய்யப்படும் என்றார்.

