ADDED : ஜூன் 15, 2025 05:38 AM
மதுரை : மதுரைக் கோட்ட எல்.ஐ.சி., உழைக்கும் மகளிர் துணைக்குழு சார்பில் அமைப்பாளர் சித்ரா தலைமையில் மாநாடு நடந்தது. நிர்வாகி வளர்மதி வரவேற்றார்.
தென் மண்டல இணை அமைப்பாளர் செண்பகம், மாற்றுப்பாலின ஆவண மைய இயக்குநர் பிரியா பாபு, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட பொருளாளர் எமிமாள் ஞானசெல்வி ஆகியோர் பேசினர்.
மாநாகராட்சி கமிஷனர் சித்ரா, உலக இளம் டேக்வாண்டோ கின்னஸ் சாதனையாளர் சம்யுக்தா, மாற்றுப் பாலின டாக்டர் கவி சுந்தர், கோட்ட அளவில் சாதனை படைத்த மகளிர் முகவர்களான திருநகர் மாலதி, காரைக்குடி விஜயலட்சுமி ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.
பாலஸ்தீனம், உக்ரைன் போர்களில் பெண்கள், குழந்தைகள் கொல்லப்படுவதை கண்டித்தல். பாலியல் வன்முறைகளுக்கு எதிராக கடும் சட்டங்களை கடைபிடிக்க வேண்டும். எல்.ஐ.சி., மகளிருக்கு மெனோபாஸ் விடுப்பு வேண்டும். குழந்தை காப்பகங்கள் அமைக்க வேண்டும். மாற்றுப் பாலினத்தவருக்கு சம உரிமைகளை அளிக்க வேண்டும். ஜாதிய, ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பொதுச் செயலாளர் ரமேஷ் கண்ணன் தொகுத்து வழங்கினார். இணை அமைப்பாளர் தங்கம் நன்றி கூறினார்.