நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : மேலுார் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் செந்தாமரை தலைமையில் கனிமவள கொள்ளை தடுப்பு குழு விழிப்புணர்வுகூட்டம் நடந்தது.
போலீஸ், வனத்துறை, புவியியல், போக்குவரத்து, நீர்வளத்துறை வி.ஏ.ஓ., க்கள் உள்பட பல்வேறு துறையினர் கலந்து கொண்டனர். கனிமவளம் கொள்ளை போவதை தடுப்பது மற்றும் போதை தரும் கஞ்சா, புகையிலை உள்ளிட்டவற்றை தடுப்பது குறித்து தாசில்தார் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

