/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை விரைவில் தமிழகத்தின் 2வது பெரிய தொழில்நகரமாக மாறும் அமைச்சர் மூர்த்தி நம்பிக்கை
/
மதுரை விரைவில் தமிழகத்தின் 2வது பெரிய தொழில்நகரமாக மாறும் அமைச்சர் மூர்த்தி நம்பிக்கை
மதுரை விரைவில் தமிழகத்தின் 2வது பெரிய தொழில்நகரமாக மாறும் அமைச்சர் மூர்த்தி நம்பிக்கை
மதுரை விரைவில் தமிழகத்தின் 2வது பெரிய தொழில்நகரமாக மாறும் அமைச்சர் மூர்த்தி நம்பிக்கை
ADDED : ஜூலை 04, 2025 03:21 AM

மதுரை: ''தமிழகத்தின் 2வது பெரிய தொழில்நகரமாக மதுரையை மாற்ற தகுந்த திட்டங்களை அரசு மேற்கொண்டு வருகிறது,'' என, மதுரையில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் சார்பில் நடந்த வணிகர் நல வாரிய விழிப்புணர்வு கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி பேசினார்.
அவர் பேசியதாவது: வணிகர்களின் பயனுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றக் கூடியதாக தற்போதைய அரசு விளங்குகிறது. தி.மு.க., 6வது முறையாக ஆட்சிக்கு வந்த போது வணிகர் சங்க உறுப்பினர்களின் எண்ணிக்கை 40 ஆயிரம். கொரோனா காலத்தில் வரி செலுத்த வணிகர்களின் கோரிக்கையை ஏற்று 4 மாதங்கள் முதல்வர் ஸ்டாலின் கால நீட்டிப்பு வழங்கினார்.
இதனால் வணிகர் சங்க உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்ந்தது.
தற்போது 88 ஆயிரம் உறுப்பினர்கள் வணிகர் நல வாரியத்தில் உள்ளனர். செங்கல்பட்டில் நடந்த வணிகர் சங்க மாநாட்டில் பல்வேறு கோரிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. சில ஆண்டுகளுக்கு முன் திருச்சி மாநாட்டில் குடும்பநல நிதியை ரூ.3 லட்சமாக முதல்வர் உயர்த்தினார்.
திருநெல்வேலியில் வெள்ளம் ஏற்பட்ட போது அப்பகுதி வணிகர்களின் கோரிக்கையை ஏற்று குறைந்த வட்டியில் கடனுதவி வழங்கப்பட்டது. சிறு, குறு வணிகர்களை துன்புறுத்தக்கூடாது என்பதில் முதல்வர் கவனமாக இருக்கிறார். சில வணிகர்கள் ஜி.எஸ்.டி., யில் இணையாததால் அரசாங்கத்தின் பலனை முழுமையாக அடையாமல் இருக்கிறார்கள். வணிகர்களிடம் இதுகுறித்து போதிய விழிப்புணர்வு இல்லை என்றார்.
கலெக்டர் பிரவீன் குமார், மாநகராட்சி கமிஷனர் சித்ரா, வணிகவரித் துறை கூடுதல் கமிஷனர் தேவேந்திர பூபதி, கோட்ட இணை கமிஷனர் கீதா பாரதி, தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.