/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பெண் தொழில்முனைவோருக்கு புதிய திட்டம்
/
பெண் தொழில்முனைவோருக்கு புதிய திட்டம்
ADDED : டிச 05, 2025 05:20 AM
மதுரை: தொழில் வணிகத்துறை சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தமிழ்நாடு மகளிர் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் திட்டத்தின் (ட்வீஸ்) கீழ் பெண்கள் தொழில் தொடங்கலாம்.
மதுரை மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் கணேசன் கூறியதாவது: மாவட்ட தொழில் மையம் மூலம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. விவசாயம், பண்ணை சார்ந்த தொழில்களுக்கு அனுமதியில்லை. பிற உற்பத்தித்தொழில்கள், சேவை, வியாபார தொழில்களை கிராமம், நகர்ப்புறங்களில் தொடங்க அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம். இதற்கு சொத்துப் பிணையம் தேவையில்லை. புதிதாக தொழில் தொடங்குவோர், கலைஞர் கைவினைத் திட்டத்தின் கீழ் ஏற்கனவே கடன்பெற்றவர்கள் தொழிலை விரிவாக்கம் செய்வதற்கும் பிரதமரின் உணவுப்பதப்படுத்தும் திட்டத்தில் விதை மூலதன கடன் பெற்ற சுயஉதவிக் குழு உறுப்பினர்களும் கடன் பெறலாம். 18 முதல் 55 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு கல்வித்தகுதி தேவையில்லை. திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம், அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை மானியம் உண்டு.
தொழில் தொடங்க தேர்வானவர்களுக்கு 3 நாட்கள் இணையவழி பயிற்சி அளிக்கப்படும். அனைத்துப்பிரிவு பெண்கள், திருநங்கைகள் தொழில் தொடங்க www.msmeonline.tn.gov.in/twees இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றார்.
கூடுதல் தகவல்களுக்கு 88835 63888 ல் தொடர்பு கொள்ளலாம்.

