
தெருநாய்களால் தொல்லை
மதுரை ஒத்தக்கடை சித்ராநகர் பகுதியில் தெருநாய்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது. தனியாக செல்வோரை, நாய்கள் கூட்டமாக துரத்துகின்றன. குழந்தைகள் வெளியே செல்ல பயப்படுகின்றனர். நாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சூரியகலா, ஒத்தக்கடை.
ஆக்கிரமிப்பு கடைகள்
தெற்குவாசல் பஸ் ஸ்டாப் எதிரே ரோட்டை கடைகள் ஆக்கிரமித்துள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மாநகராட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- காஜா முஹைதீன், தெற்குவாசல்.
ஆபத்து மேன்ஹோல்கள்
டி.வி.எஸ்., நகர் தனியார் பள்ளி பிரதான நுழைவாயில் முதல் 4 சாலை சந்திப்பு வரையுள்ள 3 மேன்ஹோல்களில் புதிய சிமென்ட் உறை, சிமென்ட் மூடியை ஒப்பந்ததாரர் ரோட்டின் உயரத்திற்கு அமைக்காமல் சென்றுவிட்டார். இதனால் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன. ஒப்பந்ததாரர் சரி செய்ய மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட வேண்டும்.
-பாலா, டி.வி.எஸ்., நகர்.
ஆபத்து நிறைந்த ரோடு
தெப்பக்குளம் தியாகராஜர் பள்ளி ரோடு மிக மோசமான நிலையில் உள்ளது. ஆயிரக்கானக்கான வாகனங்கள் செல்லும் இந்த ரோட்டில் பள்ளி குழந்தைகள் நடந்தும், மிதிவண்டியிலும் பயணிக்கின்றனர். குண்டும் குழியுமான ரோட்டில் விபத்து ஏற்படும் முன்பு மாநகராட்சி நிர்வாகம் உடனே சரிசெய்ய வேண்டும்.
-சுதர்ஸன், தெப்பக்குளம்.
ரோட்டில் பள்ளங்கள்
மதுரை பெத்தானியாபுரம் அண்ணா மெயின் வீதி மிகவும் மோசமாக உள்ளது. இதில் பள்ளங்களை கடக்கும் வாகன ஓட்டிகளை அச்சத்தில் ஆழ்த்துகின்றன. மழை பெய்தால் குழந்தைகள் பள்ளிக்கு சென்று திரும்புவது பெரும் சவால். விபத்து நடப்பதற்குள் சரி செய்யவேண்டும்.
-வித்யா, முடக்குசாலை.
நடவடிக்கை எடுப்பரா
நரிமேடு கட்டபொம்மன் தெரு ஆனந்த முத்து மாரியம்மன் கோயில் எதிரே உள்ள தனியார் குடோனில் குப்பை அதிகமாக உள்ளது. பால் பாக்கெட்டுகள் அதிகம் சேர்ந்து அப்பகுதி முழுக்க பிளாஸ்டிக் மயமாக உள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வீரபாண்டியன், நரிமேடு.