பாலம் ஆக்கிரமிப்பால் விபத்து அபாயம்
மதுரை ஆழ்வார்புரம் பகுதியில் ஏ.வி. பாலத்தின் முகப்பில் ஆட்டோக்களை நிறுத்தி ஆட்களை ஏற்றுவதால் வாகன நெரிசலுடன் விபத்தும் நடக்கிறது. போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். -
- பாஸ்கர், விஸ்வநாதபுரம்.
தெரு நாய்கள் தொல்லை
மதுரை எச்.எம்.எஸ். காலனி ஆனந்த நகர் பகுதியில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. இரவில் வெளியே செல்லமுடியவில்லை. டூவீலரில் செல்வோர்களை துரத்துகிறது.மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். -
- கவிதா, எச்.எம்.எஸ். காலனி.
சிக்னலில் திருநங்கைகள் வசூல்
மதுரை முனிச்சாலை, சிந்தாமணி, அரசரடி, மானகிரி உட்பட நகரின் சில சிக்னலில் வாகனங்கள் நிற்கும்போது திருநங்கைகள் பணம் கேட்கிறார்கள். இதனால் சிக்னல் கிடைத்தும் வாகனங்கள் செல்ல முடியவில்லை. -
- வெங்கடேஸ்வரி, அண்ணாநகர்.
ரோடுகளில் மாடுகள்
மதுரை அண்ணாநகர் முதல் செக்ஷன் ஆபீஸ் வரையிலான பகுதியில் ரோட்டில் மாடுகள் திரிவதால் இரவில் அடிக்கடி விபத்து நடக்கிறது. -
- மகாராஜன், முந்திரிதோப்பு.
குடிநீர் வீணாகிறது
திருமங்கலம் பகுதியில் பல இடங்களில் குடிநீர் குழாய்கள் சேதமடைந்துள்ளன. தண்ணீர் திறந்துவிடும் போது ரோட்டில் குடிநீர் ஆறுபோல் செல்கிறது. விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். -
- ராஜி, திருமங்கலம்.
மேம்பாலங்களில் மணல் குவிப்பு
மதுரையில் பாலங்களில்சேரும் மணலை குவித்து வைத்து அள்ளுவதில்லை. இதனால் மீண்டும் பரவி விடுகிறது. வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.
- மோகன், முனிச்சாலை.

