/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திருமங்கலத்தில் அறிவிப்போடு நின்ற ஒரு பக்க 'பார்க்கிங்'
/
திருமங்கலத்தில் அறிவிப்போடு நின்ற ஒரு பக்க 'பார்க்கிங்'
திருமங்கலத்தில் அறிவிப்போடு நின்ற ஒரு பக்க 'பார்க்கிங்'
திருமங்கலத்தில் அறிவிப்போடு நின்ற ஒரு பக்க 'பார்க்கிங்'
ADDED : பிப் 06, 2024 07:22 AM
திருமங்கலம் : திருமங்கலம் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு பக்க 'பார்க்கிங்' அறிவிப்போடு நிற்கிறது.
இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வரும் நிலையில் சில மாதங்களுக்கு முன்பு உசிலம்பட்டி ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஆனால் சாக்கடை தோண்டுவதை மட்டுமே 'ஆக்கிரமிப்பு அகற்றல்' என நினைத்து அதை மட்டுமே நகராட்சி, நெடுஞ்சாலைத் துறையினர் செய்தனர்.
அதன் பின்னர் அகற்றப்பட்ட சாக்கடை கழிவுகளும், சாக்கடை இடிப்பாடுகளும் முழுமையாக அகற்றப்படவில்லை. சிறிது நாட்களிலேயே மீண்டும் ஆக்கிரமிப்பு தொடர்ந்தது.
இந்நிலையில் உசிலம்பட்டி ரோட்டில் கடந்த ஜன.,1ல் ஒரு பக்க பார்க்கிங் முறை அமல்படுத்தப்பட்டது. ஆனால் ஆங்காங்கே 'நோ பார்க்கிங்' என போர்டு வைத்ததோடு போலீசார் தங்களது வேலையை முடித்துக் கொண்டனர்.
போக்குவரத்தை ஒழுங்கு செய்வது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் இரண்டு பக்கங்களிலுமே 'பார்க்கிங்' செய்யும் நிலை தொடர்ந்தது.
இந்நிலையில் பிப்., மாதம் தொடங்கி 5 நாட்கள் ஆன நிலையில் இந்த மாதம் 'பார்க்கிங்' செய்ய வேண்டிய பகுதியில் போர்டுகள் வைக்கப்படவில்லை. ஒரே பக்கத்தில் 'பார்க்கிங்' செய்வது குறித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
எனவே திருமங்கலம் பகுதியில் போக்குவரத்தை, பார்க்கிங்கை முறைப்படுத்தி, ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி நெரிசலை குறைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.