/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
புஞ்சை நிலங்களை நத்தம் புறம்போக்காக மாற்ற எதிர்ப்பு
/
புஞ்சை நிலங்களை நத்தம் புறம்போக்காக மாற்ற எதிர்ப்பு
புஞ்சை நிலங்களை நத்தம் புறம்போக்காக மாற்ற எதிர்ப்பு
புஞ்சை நிலங்களை நத்தம் புறம்போக்காக மாற்ற எதிர்ப்பு
ADDED : ஜூன் 10, 2025 01:44 AM
மதுரை: தமிழகத்தில் மூன்றாண்டுகளாக கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தாமல் புஞ்சை (புன்செய்) நிலங்களை நத்தம் புறம்போக்கு நிலங்களாக வருவாய்த்துறை மாற்றி வருவதால் எங்களது சொந்த நிலத்திற்கு வீட்டுமனை பட்டா கேட்டு விண்ணப்பிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்கின்றனர் தமிழக விவசாயிகள்.
விவசாயிகள் கூறியதாவது: புஞ்சை நிலம் என்பது தோட்டக்கால் பயிர் உட்பட பல்வேறு சாகுபடி பகுதியை கொண்டது. நஞ்சை (நன்செய்) நிலம் என்பது நெல் பயிர் சாகுபடி பகுதி. புஞ்சை நிலங்களுக்கு அந்தந்த நிலங்களின் உரிமையாளர்களுக்கு ஏற்கனவே பட்டா, சர்வே எண் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலங்களின் உரிமையாளர்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தாமலேயே வருவாய்த்துறை சார்பில் நத்தம் புறம்போக்கு என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நத்தம் புறம்போக்கு என்று பெயர்மாற்றம் செய்தாலும் அந்தந்த வி.ஏ.ஓ., அதிகாரிகள், நிலத்தின் உரிமையாளர்களிடம் சொல்வதில்லை. பின்னாளில் இந்த இடம் குடியிருப்பு பகுதிக்காக ஒதுக்கப்படும். புஞ்சை நிலம் என்பதற்கான பட்டா, சர்வே எண் குறித்த ஆவணங்கள் எல்லாமே எங்களிடம் இருக்கிறது. அப்படியிருக்கும் போது எந்த அடிப்படையில் வருவாய்த்துறை நத்தம் புறம்போக்கு என்று அறிவிக்கிறது.
இதற்கு அரசு தீர்வு காண வேண்டும் என்றனர்.