/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அனுப்பானடி கனுப்பாரி வேட்டை திருவிழா: ஜன.16ல் கூடலழகர் பெருமாள் எழுந்தருளுவார் உயர்நீதிமன்றத்தில் தகவல்

ADDED : ஜன 10, 2024 06:45 AM
மதுரை : மதுரை அனுப்பானடி கனுப்பாரி வேட்டை திருவிழாவில் கூடலழகர் பெருமாள் சுவாமி ஜன., 16ல் எழுந்தருளுவார்என கோயில் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தெரிவிக்கப்பட்டது.
அனுப்பானடி மணிபாரதி தாக்கல் செய்த பொதுநல மனு: அனுப்பானடியில் கனுப்பாரி வேட்டை உற்ஸவம் 1887 லிலிருந்து நடக்கிறது. இதற்காக ஜாதி வேறுபாடின்றி மண்டகப்படி அறக்கட்டளைகள் உருவாக்கப்பட்டுள்ளன. கனுப்பாரி வேட்டைதிருவிழாவின்போது கூடலழகர் பெருமாள்தை 2 முதல் 4 வரை எழுந்தருளுவது வழக்கம். இதை அக்கோயில் நிர்வாகம் ஏற்கனவே 2 நாட்களாக குறைத்தது. தற்போது அதை காரணம் இன்றி ரத்து செய்து 3:00 மணி நேரம் மட்டுமே எழுந்தருள செய்ய முடிவு செய்துள்ளது. இது ஆகம விதிகளுக்கு எதிரானது. மாற்றம் செய்ததற்கு தடை விதிக்க வேண்டும்.
ஜன.,16, 17 வரை சுவாமி எழுந்தருள நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு விசாரித்தது.
கோயில் தரப்பு: கோயில் கும்பாபி ேஷகம் ஜன.,21ல் நடைபெறும். யாகசாலை பூஜை ஜன.,17ல் துவங்குகிறது. இம்முறை ஜன.,16ல் காலை 6:00 முதல் மாலை 6:00 மணி வரை சுவாமி அனுப்பானடியில்எழுந்தருளுவார்.
இவ்வாறு தெரிவித்தது.
இதை பதிவு செய்த நீதிபதிகள்: பாரம்பரிய பழக்க வழக்கங்கள் அடிப்படையில் சுவாமி எழுந்தருளும் வைபவம் நடைபெற வேண்டும். இவ்வாறுஉத்தரவிட்டனர்.