ADDED : அக் 04, 2025 03:50 AM
மதுரை: மதுரை மாவட்டத்தில் இருந்து தேனி மாவட்டத்திற்குள் செல்லும் மலைப்பாதையை சீரமைக்க தமிழ்நாடு குடிமக்கள் நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் கர்ணன் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: மதுரை மாவட்டம் மல்லபுரத்தில் இருந்து தேனி மாவட்டம் முத்தாலம்பாறைக்கு செல்லும் மலைப்பாதை ஆபத்தானதாக உள்ளது.
மயிலாடும்பாறை, வருஷநாடு, முத்தாலம்பாறை பகுதியில் விளையும் காய்கறிகள், பழங்களை மதுரை பகுதி மார்க்கெட்களுக்கு விவசாயிகள் கொண்டு வருகின்றனர். ஏராளமான மாணவர்கள் கல்வி நிலையங்களுக்கு வருகின்றனர்.
இந்த பாதையை தேனி கலெக்டர் ஆய்வு செய்து, அம்மாவட்ட எல்லை வரை தார்சாலை அமைத்துள்ளார். ஆனால் மதுரை மாவட்ட பகுதிக்குள் சீரமைக்கவில்லை.
இப்பகுதியில் மலைப்பாதையை விரிவாக்கம் செய்து, தார்சாலை அமைக்க வேண்டும். இல்லையெனில் ஐகோர்ட் கிளையில் பொதுநல வழக்கு தொடர்வதைத் தவிர வேறு வழியில்லை என தெரிவித்துள்ளார்.

