ADDED : செப் 20, 2025 04:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி: வாடிப்பட்டி வனம் நலம் இயக்கம் சார்பில் போடிநாயக்கன்பட்டி ஊருணி மற்றும் வைகை பெரியாறு பாசன கால்வாய் கரையில் 450 மரக்கன்றுகள் நடப்பட்டன.
நிர்வாகிகள் தங்கராசு, ஈஸ்வரன், கணேசன், சங்கரபாண்டி முன்னிலை வகித்தனர். ஓய்வுபெற்ற தாசில்தார் ராமன் துவக்கி வைத்தார். கண்ணதாசன் இலக்கிய மன்றத் தலைவர் பொன்னையா வரவேற்றார். தன்னார்வலர்கள் டாக்டர் தீபக், ஹரிஷ், தினகரன், மணிகண்டன், துரைப்பாண்டி, ஜெயச்சந்திரன், விக்னேஷ், ஆட்டோ ஓட்டுநர்கள் ராஜேந்திரன், ஆனந்த், கோபி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.