
சூதாடிய ஐவர் கைது
பேரையூர்: சந்தையூர் காளியம்மன் கோயில் முன்புறம் அதே ஊரைச் சேர்ந்த வேல்முருகன் 45. முத்தையா 65.வெங்கடேஸ்வரன் 56. சுப்ரமணியம் 75, மாரியப்பன் 70, பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்தனர். ரோந்து சென்ற போலீசார் அவர்களை கைது செய்து விசாரிக்கின்றனர்.
மது விற்றவர் கைது
பேரையூர்: காளப்பன்பட்டியைச் சேர்ந்தவர் தவமணி 40. இவர் வீட்டின் பின்புறம் வைத்து மது விற்று கொண்டிருந்தார். ரோந்து சென்ற சேடபட்டி எஸ்.ஐ., காசிராஜா அவரை கைது செய்து 20 மது பாட்டில்களை பறிமுதல் செய்தார்.
மாடு முட்டி ஒருவர் பலி
மேலுார்: செம்மனிபட்டியில் தைப்பூசத்தை முன்னிட்டு ஆண்டிபாலகர் கோயில் அருகே செம்மனிகண்மாயில் மஞ்சுவிரட்டு நடந்தது. ஐநுாறுக்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. இவற்றை அடக்கியதில் 40க்கும் மேற்பட்டோருக்கு காயம் ஏற்பட்டது.
இதில் வேடிக்கை பார்த்த தனியார் பள்ளியில் நடத்துனராக பணிபுரிந்த வெள்ளலுார் சந்திரன் 60, மாடு முட்டியதில் இறந்தார். மேலுார், சிவகங்கை, சிங்கம்புணரி பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். டி.எஸ்.பி., ஆர்லியஸ் ரெபோனி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

