ADDED : ஜன 17, 2024 07:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : திருப்பரங்குன்றம் ஐயப்பன் தாங்கல் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் மூன்றாமாண்டு பொங்கல் விழா விளையாட்டுப் போட்டிகள் நேற்று நடந்தன.
காலையில் சங்கக் கொடியை ஏற்றி வைத்த தொழிலதிபர் கண்ணன் போட்டிகளை துவக்கி வைத்தார். மாலை வரை பலவகை விளையாட்டு போட்டிகள் நடந்தன. பரிசளிப்பு விழாவிற்கு சங்கத்தலைவர் ஜெயபாலன் தலைமை வகித்தார்.
செயலாளர் மோகன் வரவேற்றார். கவுரவ தலைவர்கள் கைலாசநாதன், ராஜேந்திரன், கணேசன் பகுதி பிரச்னைகள் குறித்து பேசினர். மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் சுவிதா, தொழிலாளர் நலத்துறை ஆய்வாளர் தயாநிதி போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கினர். கவுரவ ஆலோசகர் தயாநிதி, கவுன்சிலர் கருப்புசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

