/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மேலுார் செம்மினிபட்டியில் பூக்குழி திருவிழா
/
மேலுார் செம்மினிபட்டியில் பூக்குழி திருவிழா
ADDED : ஜன 26, 2024 05:35 AM

மேலுார்: மேலுார் செம்மனிபட்டியில் ஆண்டிபாலகர் முருகன் கோயிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு ஜன. 16 காப்பு கட்டி திருவிழா துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக நேற்று நேர்த்திக்கடன் நிறைவேறிய பக்தர்கள் வேல் குத்தியும், நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.
குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் கரும்பினால் ஆன தொட்டில் கட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர். பிறகு பக்தர்கள் கொடுத்த காய்கறியை கொண்டு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று (ஜன.26) மஞ்சுவிரட்டு நடக்கிறது. இக்கோயிலில் முருகன் சிலைக்கு பதிலாக வேல் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.
கீழையூர், கீழவளவு, செம்மனிபட்டி பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் புலிமலைப்பட்டி, மேலுாரை சுற்றியுள்ள கோயில்களிலும் தைப்பூச திருவிழா விமரிசையாக நடந்தது.

