ADDED : செப் 29, 2025 06:07 AM
திருப்பரங்குன்றம் :  மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரியில் ஆசிரியர் தின விழா, சிறந்த பேராசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா நடந்தது.
கல்லுாரி செயலாளர்கள் ஸ்ரீதர் தலைமை வகித்தார். முதல்வர் ராம சுப்பையா முன்னிலை வகித்தார்.  கவுரவ தலைவர் ராஜகோபால், தலைவர் விஜயராகவன்,  துணைத் தலைவர் ஜெயராமன்,  உதவி செயலாளர் சுரேந்திரன்,  பொருளாளர் ஆழ்வார்சாமி,  சுயநிதிப் பிரிவு இயக்குனர் பிரபு பங்கேற்றனர். தியாகராஜர் கலைக்கல்லுாரி முன்னாள் முதல்வர் ராஜா கோவிந்தசாமி  பேசினார்.
கல்லுாரியில் பணியாற்றும் பேராசிரியர்கள் நிரஞ்சனி,  ரஞ்சித் குமார், சங்கீதா, வெங்கடேஷ் பாரதி, அன்புஒளி, ராகவேந்திரனுக்கு சிறந்த  ஆசிரியர் விருது, பேராசிரியர் சிலம்பரசனுக்கு சிறந்த சமூக சேவைக்கான விருதும், விடுப்பு எடுக்காத பேராசிரியர்களுக்கு முழு ஊதிய தொகை வழங்கப்பட்டது. உதவிப் பேராசிரியர் ஜான்சி அறிமுக உரையாற்றினார். பேராசிரியர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.

