ADDED : ஜூன் 24, 2025 03:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: இ. மலம்பட்டியில் நெல் கொள்முதல் துவங்காததால் வெயில், மழைக்கு நெல் நனைந்து வீணாகியது.
தவிர எடை குறைவதோடு கால்நடைகளிடமிருந்து நெல்லை பாதுகாக்க விவசாயிகள் இரவு பகலாக காத்து கிடப்பதால் மன உளைச்சலுக்கு ஆளாயினர். இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொளியாக நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் குணசேகர் ஏற்பாட்டின் பேரில் நெல் கொள்முதல் துவங்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.