
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: சோழவந்தான் அருகே விக்கிரமங்கலத்தில் கருப்ப சுவாமி கோயில் பின்புறத் தெருவில் சாக்கடை செல்லும் பாதை நிழற்குடை அமைப்பதற்காக மூடப்பட்டது. தற்காலிகமாக சாக்கடை கழிவுநீர் வேறு பகுதிக்கு திருப்பி விடப்பட்டிருந்தது. அந்தப் பகுதி மேடாக இருந்ததால் கழிவு நீர் செல்ல முடியவில்லை.இதனால் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம், நோய்தொற்று அபாயம் ஏற்பட்டது.
நான்கு ஆண்டுகளாக மூடப்பட்ட சாக்கடை கால்வாயை மீண்டும் அமைக்க வலியுறுத்தி பலமுறை அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டும் நடவடிக்கை இல்லை.இதுகுறித்து சில நாட்களுக்கு முன்பு தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியாகியிருந்தது.
இதையடுத்து உடனடி நடவடிக்கையாக சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி நடக்கிறது. அப்பகுதி மக்கள் தினமலர் நாளிதழுக்கு நன்றி கூறினர்.