ADDED : ஜூன் 28, 2025 12:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:மதுரை நாகமலைபுதுக்கோட்டை வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரியில், முதலாண்டு மாணவர்களை ஆற்றுப்படுத்தல் நிகழ்ச்சி நடந்தது.
தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் பேசியதாவது: படிப்பு மட்டுமே நாம் அமரும் நாற்காலியை முடிவு செய்யும். அருவி நீர் கல், முள், மேடு, பள்ளம் கடந்து அடைய வேண்டிய இடத்தைச் சென்றடைவது போல, நாமும் முயன்று வெற்றியை அடைய வேண்டும். ஒவ்வொரு நாளும் சில மணிநேரமாவது உடற்பயிற்சி செய்து நம் ஆரோக்கியத்தைப் பேண வேண்டும் என்றார்.
கல்லுாரி முதல்வர் ராஜேஸ்வர பழனிச்சாமி, தாளாளர் சுந்தர் பேசினர். துணை முதல்வர் செல்வமலர், ஆராய்ச்சி மற்றும் வெளியீடு இயக்குநர் பிரெட்ரிக், சுயநிதிப்பிரிவு இயக்குநர் ராமமூர்த்தி ஏற்பாடு செய்தனர். ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.