நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார் : செம்மனிப்பட்டி ஆண்டிபாலகர் கோயில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நேற்று (ஜன. 16) காப்பு கட்டும் திருவிழா நடந்தது. ஜன.23ல் விளக்கு பூஜை மற்றும் பாலா பிஷேகமும் நடைபெறுகிறது.
ஜன.24 காவடி ஆட்டம் மற்றும் கோயில் முன்பு அக்னி வளர்க்கும் நிகழ்ச்சியும், ஜன.25 சுவாமிக்கு அலகு குத்தியும் குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் குழந்தைகளை கரும்பினால் ஆன தொட்டில் கட்டியும் நேர்த்திக்கடன் செலுத்துவர். அதனை தொடர்ந்து பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும், அன்னதானமும், ஜன.26 மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

