/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை வலியுறுத்தும் வருவாய் அலுவலர்கள் கண்டுகொள்ளாததால் பதவி உயர்வை துறக்க முடிவு

ADDED : பிப் 29, 2024 11:02 PM

மதுரை:'வி.ஏ.ஓ.,க்களின் பதவி உயர்வுக்கான அரசாணையில் 21 ஆண்டுகளாக விதி திருத்தம் செய்யாமல் காலம் தாழ்த்தும் வருவாய் நிர்வாக ஆணையரக அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என பதவி உயர்வு அலுவலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மதுரையில் இச்சங்கத்தின் மாநில பொதுச்செயலர் ஜெயகணேஷ் கூறியதாவது:
வருவாய்த்துறையில் வி.ஏ.ஓ.,க்களுக்கு உதவியாளராக பதவி உயர்வு வழங்கும்போது, மனிதவள மேலாண் துறையின் அரசாணைப்படி விதி திருத்தம் செய்ய வேண்டும்.
ஆனால் வி.ஏ.ஓ., பதவி உயர்வு அரசாணை மீது 21 ஆண்டுகளாக விதி திருத்தம் செய்யவில்லை.
வி.ஏ.ஓ.,க்களைப் போல இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்களும் பதவி உயர்வில் உதவியாளராக வருகின்றனர்.
இவர்களுக்கும், வி.ஏ.ஓ.,க்களுக்கும் பணியில் சேர்ந்த நாளின் அடிப்படையில் பணிமூப்பு பட்டியலை (முதுநிலைப் பட்டியல்) தயார் செய்ய வேண்டும்.
ஆனால் குறைந்த ஊதியம் பெறும் இளநிலை உதவியாளர், தட்டச்சர்களுக்கு விதிமீறி முதுநிலை பட்டியலை நிர்ணயம் செய்கின்றனர்.
இதனால் வி.ஏ.ஓ.,க்களின் அடுத்தடுத்த பதவி உயர்வு பாதிக்கிறது.
இதற்கு விதி திருத்தம் செய்ய காலம் தாழ்த்தும் வருவாய் நிர்வாக ஆணைய அதிகாரிகளே காரணம்.
இதுபற்றி மனிதவள மேலாண்மைத் துறையில் தெளிவுரை பெறாமலும் அவர்கள் செயல்படுகின்றனர்.
அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மீண்டும் போராட்டம் நடத்த உள்ளோம்.
மார்ச் 4ல் வருவாய் நிர்வாக ஆணையரகம் முன் கண்கள், கைகளை கட்டி, வாயை மூடி உண்ணாவிரதம் இருப்பது, தங்களுக்கு வழங்கிய பதவி உயர்வை துறந்து மீண்டும் வி.ஏ.ஓ.,க்களாக மாறுவதற்கு கலெக்டர்களிடம் மனு கொடுப்பது என முடிவெடுத்துள்ளோம்.
இதுகுறித்து முதல்வர், வருவாய்த்துறை அமைச்சர், மனிதவள மேலாண்மைத் துறை செயலருக்கு மனு அளித்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.