/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அலுவலகம் இங்கே; அதிகாரிகள் எங்கே பூட்டிக் கிடக்குது; மேலூர் நீர்வளத்துறை
/
அலுவலகம் இங்கே; அதிகாரிகள் எங்கே பூட்டிக் கிடக்குது; மேலூர் நீர்வளத்துறை
அலுவலகம் இங்கே; அதிகாரிகள் எங்கே பூட்டிக் கிடக்குது; மேலூர் நீர்வளத்துறை
அலுவலகம் இங்கே; அதிகாரிகள் எங்கே பூட்டிக் கிடக்குது; மேலூர் நீர்வளத்துறை
ADDED : ஜன 17, 2024 07:02 AM

மேலுார் : மேலுார், தனியாமங்கலத்தில் உள்ள அலுவலகத்திற்கு அதிகாரிகள் வராமல் பூட்டிக் கிடப்பதாக நீர்வளத்துறையினர் மீது புகார் எழுந்துள்ளது.
புலிப்பட்டியில் ஆரம்பிக்கும் 12 வது பெரியாறு பிரதான கால்வாய் குறிச்சிப்பட்டி கண்மாய் வரை செல்கிறது. இக் கால்வாய்கள் மற்றும் மடைகளை பராமரிக்க தனியாமங்கலத்தில் நீர்வளத்துறை சார்பில் ஒரு உதவிப்பொறியாளர் தலைமையில் அலுவலர்கள் தங்கிப் பணிபுரிய பிரிவு அலுவலகம், குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. ஆனால் அதிகாரிகள் இங்கு வராததால் அலுவலகம் பூட்டிக் கிடக்கிறது.
விவசாயிகள் கூறியதாவது: அலுவலகத்திற்கு அதிகாரிகள் வருவதே இல்லை. வடக்கு வலையபட்டி, சருகுவலையபட்டி பகுதிகளில் கால்வாய் அழிந்து வருகிறது. அலுவலக அறிவிப்பு பலகையில் அணையின் நீர் இருப்பு பற்றிய விபரங்களை தெரிவிப்பதும் இல்லை. தற்போது அலுவலகம் உண்டு; அதிகாரிகள் இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது. உதவிப் பொறியாளரை பார்க்க மேலுார் செல்கிறோம். உயரதிகாரிகள் வருவது தெரிந்தால் மட்டுமே ஓய்வு பெற்ற அலுவலர்களை வைத்து அலுவலகத்தை திறக்கின்றனர். அலுவலகம் பராமரிப்பின்றி புதர்மண்டி கிடக்கிறது. இதனால் விஷப்பூச்சிகளின் குடியிருப்பாக மாறி வருகிறது. இந்த அலுவலகம் செயல்பட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
நீர்வளத்துறை செயற்பொறியாளர் சிவபிரபாகர் கூறுகையில், உதவிப்பொறியாளர் பிரபாகர் இரண்டு பகுதிகளை பராமரிப்பதால் அடிக்கடி வெளியே செல்கிறார். அலுவலகத்தில் இருக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

