ADDED : ஜூன் 20, 2025 03:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா தீர்த்தவாரி உற்ஸவத்துடன் நிறைவடைந்தது.
ஜூன் 2ல் கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவில், முக்கிய நிகழ்வுகளான பால்குடம், தீச்சட்டி, தேரோட்டம் நடந்தன. நிறைவு விழாவில் வைகை ஆற்றில் தீர்த்தவாரி உற்ஸவம் நடந்தது.
மாலையில் கொடி இறக்கப்பட்டு மஞ்சள் நீராடி அம்மன் கையில் குடம், வாளி, ஊத்துப்பட்டை, முளைப்பாரியுடன் பெண்கள் பின்தொடர ரத வீதிகள் வழியாக வைகை ஆற்றுக்கு சென்றார்.
அங்கு அபிஷேகம் முடிந்து, மணல் குன்றின் மேல் அமைத்திருந்த மலர் ஊஞ்சலில் அம்மன் காட்சியளித்தார். திரளான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.