ADDED : செப் 17, 2025 12:23 AM
கோயில் ஜெயந்தி நவராத்திரி உற்ஸவம்: நவநீத கண்ணன் சன்னதி, கீழமாரட் செட்டிய தெரு, மதுரை, சரஸ்வதி அலங்காரம், ஹம்ச வாகனத்தில் சுவாமி உலா, இரவு 7:00 மணி.
ஜெயந்தி உற்ஸவம்: ராமசுவாமி நவநீத கிருஷ்ணசுவாமி கோயில், ராமாயணச் சாவடி தெரு, வடக்கு மாசி வீதி, மதுரை, பல்லக்கு ராஜாங்கம், ராமாயணச் சாவடி மண்டபம், காலை 8:00 மணி, ஊஞ்சல் வீணை மோகினி திருக்கோலம், மாலை 4:00 மணி, ராமாவதாரம் அனுமர் வாகனத்தில் நான்கு மாசி வீதி உலா, இரவு 7:00 மணிக்கு மேல்.
ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்குச் சித்திரை வீதி, மதுரை, மதியம் 12:00 மணி.
அம்பலவாண யோகீஸ்வரர் 61ம் ஆண்டு குருபூஜை மற்றும் வருஷாபிஷேகம்: விவேகானந்த முனீஸ்வரர் கோயில், அன்புவீதி, பாண்டியராஜபுரம் மேட்டுத்தெரு, பெத்தானியாபுரம், பூஜைகள், காலை 6:00 மணி முதல், அன்னதானம், காலை 11:30 மணி முதல்.
ஏகாதசியை முன்னிட்டு விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம், காஞ்சி காமகோடி மடம், பெசன்ட் ரோடு, மதுரை, மாலை 6:00 மணி. ஏற்பாடு: ஹரிபக்த பக்த சமாஜம்.
பக்தி சொற்பொழிவு ஜகம் புகழும் ஜகந்நாதர்: நிகழ்த்துபவர் - தென்திருப்பேரை அரவிந்த்லோசனன், மதனகோபாலசுவாமி கோயில், மேலமாசி வீதி, மதுரை, மாலை 6:30 மணி.
திருவருட்பா: நிகழ்த்துபவர் - பார்வதி, மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.
ராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்: நிகழ்த்துபவர் - சுவாமி நித்யதீபானந்தர், ராமக்கிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 6:30 மணி, ஏகாதசி முன்னிட்டு ராம நாம சங்கீர்த்தனம், இரவு 7:00 மணி.
ஏகாதாசி முன்னிட்டு ஹரே ராமா கீர்த்தனை: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர் பங்களா, காலை 8:00 மணி முதல்.
பகவத்கீதை சம்பூர்ண பாராயணம்: நிகழ்த்துபவர்கள் - ஆசிரம அன்பர்கள், சிரவணானந்த ஆசிரமம், 4 கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மதியம் 1:00 மணி.
பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு எம்.எஸ்.ஆபீஸ், எக்ஸெல் பயிற்சி பட்டறை: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, சிறப்புரை: ஆடிட்டர் துங்கர் சந்த், ஏற்பாடு: மேலாண்மை துறை, காலை 10:45 மணி, பெற்றோர் ஆசிரியர் சந்திப்புக் கூட்டம்: தலைமை: முதல்வர் ராஜேஸ்வர பழனிசாமி, மதியம் 12:30 மணி.
நக்கீரர் ஆய்வரங்கம் கட்டுரை சமர்பித்தல்: மீனாட்சி அரசு மகளிர் கல்லுாரி, மதுரை, தலைமை: கல்லுாரி தேர்வுக்கட்டுபாட்டு அலுவலர் சந்திரா, மதியம் 1:00 மணி.
மதுரை மண்டலக் கல்லுாரி மாணவர்களுக்கான தமிழ் இலக்கியம் சார்ந்த பேச்சுப்போட்டி: தியாகராஜர் கல்லுாரி, மதுரை, ஏற்பாடு: பேராசிரியர் சொ.சொ.மீ.சுந்தரம் அறக்கட்டளை, காலை 9:00 மணி.
கல்லுாரி நாட்டுநலப்பணித் திட்டம் சார்பில் அடிப்படை முதலுதவி செய்தல் பயிற்சி: யாதவர் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் ராஜூ, முன்னிலை: கல்லுாரி தலைவர் ஜெயராமன், காலை 10:00 மணி, ரோட்டரி கிளப் 3ம் ஆண்டு நிறுவுதல் விழா: ஏற்பாடு: கல்லுாரி ரோட்டரி கிளப், காலை 11:00 மணி.
ரத்த தான முகாம்: அமெரிக்கன் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் பால்ஜெயகர், சிறப்பு விருந்தினர்: அரசு மருத்துவமனை டீன் அருள் சுந்தரேஷ் குமார், ஏற்பாடு: கல்லுாரி நாட்டுநலப்பணித் திட்டம், அரசு மருத்துவமனை ரத்தவங்கி, காலை 9:00 மணி.
பொது முன்னேற்ற மேம்பாடு -அபிவிருத்தி கூட்டுறவை செயல்படுத்துதல் - மதுரை கூடலரங்கம் 2025 துவக்க விழா: சேம்பர் ஆப் காமர்ஸ், காமராஜர் ரோடு, மதுரை, துவக்கவுரை: கலெக்டர் பிரவீன்குமார், பங்கேற்பு: முன்னாள் கூடுதல் தலைமை செயலர் சத்யகோபால், வரவேற்பு: தானம் அறக்கட்டளை இயக்குநர் குருநாதன், பேசுபவர்கள்: நிர்வாக இயக்குநர் வாசிமலை, தலைவர் பங்கேரா, ஏற்பாடு: தானம் அறக்கட்டளை, காலை 10:00 மணி.
பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, தலைமை: தலைவர் சின்னப்பொன்னு, ஏற்பாடு: அரசு ஊழியர்கள் சங்கம், மாலை 5:45 மணி.
மதுரையில் கூரை சூரிய சக்தியை உயர்த்துவதை ஊக்குவித்தல் கருத்தரங்கம்: ஓட்டல் ராயல் கோர்ட், மதுரை, வங்கியின் பங்களிப்பு பற்றி பேசுபவர்கள்: எஸ்.பி.ஐ., குமாரம் கிளை மேலாளர் மீனாட்சி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா கோச்சடை கிளை மேலாளர் சார்லஸ், இந்தியன் பேங்க் வட்டார அலுவலக மூத்த மேலாளர் ஜெயசுதா, ஏற்பாடு: சி.ஏ.ஜி., காலை 9:30 மணி முதல்.
விஸ்வ பிரம்ம ஜெயந்தி: விஸ்வேஸ்வரா வித்யாலயா பள்ளி வளாகம், கீரைத்துறை, மதுரை, தலைமை: மாநில தலைவர் சண்முகநாதன், ஏற் பாடு: தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்கம், காலை 11:00 மணி.
ஈ.வெ.ரா., பிறந்தநாள் விழா: அண்ணா பூங்கா, திருநகர், மதுரை, தலைமை: பொருளாளர் மாணிக்கராஜ், சிறப்புரை: தமிழ்நாடு வணிகவரித்துறை ஓய்வு பெற்ற அலுவலர் மற்றும் பணியாளர் சங்க மாநில தலைவர் கோட்டைராசு, ஏற்பாடு: திருநகர் மக்கள் மன்றம், காலை 8:00 மணி.
ஈ.வெ.ரா., பிறந்தநாள் விழா: மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க., அலுவலகம், பங்கேற்பு: அமைச்சர் மூர்த்தி, ஏற்பாடு: மதுரை வடக்கு மாவட்ட தி.மு.க., காலை 9:00 மணி.
மருத்துவம் மாணவர்களுக்கான பல் பரிசோதனை முகாம்: மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, டி.பி.கே., ரோடு, மேலவாசல், மதுரை, ஏற்பாடு: மாநகராட்சி, கல்வித்துறை, சி.எஸ்.ஐ., பல் மருத்துவக் கல்லுாரி, காலை 9:30 முதல் மதியம் 1:00 மணி வரை.