ADDED : செப் 07, 2025 03:53 AM
கோயில் மஹா கும்பாபிஷேகம், 70வது ஆண்டு குருபூஜை விழா: அருணகிரி சுவாமிகள் கோயில், அவனியாபுரம், மதுரை, இரண்டாம் கால யாக பூஜை, காலை 6:00 மணி முதல், விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றுதல், காலை 8:00 மணி, அன்னதானம், காலை 10:00 மணி, வண்டியூர் திருமுறை வழிபாட்டு குழு சார்பில் தேவாரம், திருவாசகம், திருப் புகழ் சொற்பொழிவு, காலை 11:00 மணி.
மாதாந்திர உழவாரப்பணி: பாலாம்பிகை கல்யாண சுந்தரேஸ்வரர் கோயில், அவனியாபுரம், மதுரை, முக்தீஸ்வரர் கோயில், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம், காலை 9:30 மணி.
மஹா பெரியவர் கோயில் கட்டுமானம் திருப்பணி துவக்க விழா: பொய்கைக்கரைப்பட்டி, அழகர்கோவில், சிறப்பு விருந்தினர்: எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார், பங்கேற்பு: தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன், திருப்பரங்குன்றம் முருகன் கோயில் அறங்காவலர் சண்முகசுந்தரம், ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரக நிறுவனர் நெல்லை பாலு, காலை 8:30 மணி.
கும்பாபிஷேகம்: தொந்தி விநாயகர் கோயில், கொட்டாம்பட்டி, காலை 9:00 மணி.
ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்குச் சித்திரை வீதி, மதுரை, மாலை 4:30 மணி.
ஞாயிறு ஆராதனை: கிறிஸ்துவின் சபை, விசுவாசபுரி, மதுரை, காலை 10:00 மணி.
பக்தி சொற்பொழிவு ராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்: நிகழ்த்துபவர் - சுவாமி குணார்னவானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.
திரிவேணி விழாவை முன்னிட்டு பகவத் கீதை பாராயணம், சிவ புராணம் விரிவுரை: நிகழ்த்து பவர் - சுவாமி ததேவானந்தா சரஸ்வதி, தெய்வநெறிக் கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 6:00 மணி, திருப்புகழ் சபை பஜன் மண்டலியினரின் சங்கீர்த்தனம், பேராசிரியர் சவுந்திரராஜனின் சிறப்புரை, ரமண மந்திரம், சொக்கப்ப நாயக்கர் தெரு, மதுரை, மாலை 6:00 மணி.
லலிதா சஹஸ்ரநாம பாராயணம்: நிகழ்த்துபவர் - சுவாமினி ப்ரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, பகவான் ரமணரின் 'சத்தர்ஸனம்', காலை 9:15 மணி, தாயுமானவர் சுவாமிகள் பாடல்கள்: நிகழ்த்துபவர் - சுவாமி சமானந்தர், இரவு 7:00 மணி.
பொது புத்தகத் திருவிழா: தமுக்கம் மைதானம், மதுரை, தலைமை: போலீஸ் கமிஷனர் லோகநாதன், பங்கேற்பு: துணை கமிஷனர் அனிதா, தல்லாகுளம் உதவி கமிஷனர் ராஜேஸ்வரன், 'நம் வாழ்க்கை நம் கையிலா, பிறர் கையிலா' - தமிழறிஞர் சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம், மாலை 6:00 முதல் இரவு 9:00 மணி வரை, பள்ளி, கல்லுாரி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், மாலை 4:00 முதல் 6:00 மணி வரை, ஏற்பாடு: மாவட்ட நிர்வாகம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம், கண்காட்சி நேரம்: காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை.
அகவிழி பார்வையற்றோர் விடுதி திறப்பு விழா: மூணுார், பொய்கைக்கரைப்பட்டி, முன்னிலை: இந்திய வழக்கறிஞர் சங்க செயலாளர் சாமிதுரை, சிறப்பு விருந்தினர்: நீதிபதி ஜெயக்குமாரி ஜெமி ரத்னா, காலை 8:30 மணி.
இந்திய ராணுவத்தின் மெட்ராஸ் இன்ஜினியரிங் குழுவின் 11வது படைப்பிரிவின் 61வது எழுச்சி நாள் விழா, 3வது ஆண்டு விழா: ஓட்டல் ரியோ கிராண்ட், மாட்டுத்தாவணி, மதுரை, தலைமை: தலைவர் சுலைமான், சிறப்பு விருந்தினர்: சேர்மன் கேப்டன் ராஜூ, ஏற்பாடு: எம்.ஆர்.டி., முன்னாள் ராணுவ வீரர்களின் தென் மண்டல அமைப்பு, காலை 9:00 மணி.
ஆசிரியர் தின கருத்தரங்கம்: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவன முதல்வர் தேவதாஸ், சிறப்புரை: யோகா மாணவர்கள் ஷாலினி, அன்புலதா, மாரி ராஜ்குமார், காலை 10:00 மணி.
நிலவொளியில் - புத்தக விமர்சனம், இலக்கிய விவாத நிகழ்ச்சி: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மதுரை, பங்கேற்பு: இலக்கிய ஆர்வலர்கள், படைப்பாளிகள், வாசகர்கள், மாலை 6:00 மணி.
பள்ளி மாணவர்களுக்கான இலவச மிருதங்கம், ஹார்மோனியம் பயிற்சி வகுப்பு: நாமத்வார் பிராத்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதியம் 12:00 முதல் 3:00 மணி வரை.
கலை மாலை: தீயணைப்பு நிலையம் எதிரில், மேல அனுப் பானடி, மதுரை, தலைமை: நிர்வாகி கோபி, சிறப்பு விருந்தினர்: சோழ.நாகராஜன், மாணவர்களுக்கு பரிசு வழங்குபவர்: துணை மேயர் நாகராஜன், ஏற்பாடு: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கம், மாலை 5:00 மணி.