/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஒரே மதிப்பெண் பெற்ற இரட்டை சகோதரிகள்
/
ஒரே மதிப்பெண் பெற்ற இரட்டை சகோதரிகள்
ADDED : மே 17, 2025 01:09 AM
மதுரை: மதுரையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் இரட்டையர்கள் மகா ஸ்ரீ, மாயா ஸ்ரீ ஒரே மதிப்பெண் பெற்று ஆச்சரியப்படுத்தினர்.
திருப்பாலை வழக்கறிஞர் ரமேஷ் - மாலதி தம்பதி மகள்களான இவர்கள் சாராதா வித்யாவனம் மெட்ரிக் பள்ளியில் படித்தனர். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் இருவரும் 500க்கு 475 மதிப்பெண் பெற்றனர். ஆங்கிலத்தில் 96 மதிப்பெண் பெற்றனர்.
அவர்கள் கூறியதாவது:
எங்களுக்கே நம்ப முடியவில்லை. சந்தோஷமாக உள்ளது. இருவரில் ஒருவர் மதிப்பெண் குறைவாக பெற்றிருந்தாலும் மனம் பாதித்திருக்கும். காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் கூட இதுபோன்ற ஒற்றுமை மதிப்பெண் பெற்றதில்லை. ஆனால் இருவரும் பேசும்போதும், சிந்திக்கும் போது ஒரே மனநிலையை உணர்ந்திருக்கிறோம்.
'டிரெஸ்' ஒரே மாதிரி தான் அணிவோம். கனவு கூட பல நேரங்களில் எங்களுக்கு ஒன்றாக வந்துள்ள அனுபவமும் உண்டு. பிளஸ் 1ல் இருவரும் ஒரே குரூப் எடுக்க உள்ளோம் என்றனர்.