ADDED : ஜன 08, 2025 05:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி : உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பிரசவ காலத்திற்கு முன்பாகவும், எடை குறைவாகவும் பிறந்த இரட்டை குழந்தைகள் உட்பட 5 குழந்தைகளுக்கு சிறப்பு சிகிச்சை வழங்கி எடையை அதிகரித்து ஆரோக்கியமான குழந்தைகளாக வளர்த்து சாதனை படைத்துள்ளனர்.
குழந்தைகளுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், செவிலியர்கள், ஒத்துழைத்த அம்மாக்களுக்கு பாராட்டு விழா மருத்துவமனை கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில் நடந்தது. நிலைய மருத்துவ அலுவலர் மாதவன், குழந்தைகள் நல டாக்டர்கள் ராதாமணி, செந்தில்நேஷ், ஹேமலதாதேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.