ADDED : செப் 29, 2025 04:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சோழவந்தான்: சோழவந்தான் அருகே மேலக்கால் ஊராட்சி கச்சிராயிருப்பில் தெரு விளக்குகள் அமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.
அப்பகுதி ரமேஷ் கூறியதாவது: இங்கு 500க்கும் மேற்பட்ட வீடுகளில் ஏராளமானோர் வசிக்கிறோம். ஊரில் இருந்து மயானம் ஒரு கி.மீ., தொலைவில் உள்ளது. மந்தையில் இருந்து மயானத்திற்கு செல்லும் வழியில் 10க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் உள்ளன. ஆனால் அவற்றில் விளக்குகள் இல்லை.
இரவில் மயானத்திற்கு செல்லும் போது மிகுந்த சிரமம் அடைகிறோம். இப்பகுதியில் ஏராளமான நிலங்களில் விவசாயம் நடக்கிறது. பணி முடிந்து மாலையில் திரும்புவோர் இவ்வழியிலேயே செல்வர். இரவில் விஷ ஜந்துக்களால் ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது. ஒன்றிய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் பலனில்லை.
மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

