/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பணி நாளா... பணியில்லா நாளா...: ஆசிரியர்கள் கலந்தாய்வு உத்தரவால் சர்ச்சை : தற்செயல் விடுப்பை ரத்துசெய்ய வலியுறுத்தல்

ADDED : ஜூலை 01, 2025 02:58 AM

மதுரை: மதுரையில் இன்று (ஜூலை 1) துவங்கும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு இளங்கோ மாநகராட்சி மேல்நிலை பள்ளிக்கு பதில் மூன்றுமாவடி எல்.பி.என்., பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் 700க்கும் ஆசிரியர்கள் மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க உள்ளனர். இவர்களுக்கு ஜூலை 8 வரை கலந்தாய்வு நடக்கிறது. இன்று அரசு மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்களுக்கான மாவட்டத்திற்குள் மாறுதல், நாளை (ஜூலை 2) மாவட்டம் விட்டு மாவட்டம், ஜூலை 3ல் முதுகலை, கணினி ஆசிரியர்கள், உடற்கல்வி நிலை 1, தொழில்கல்வி ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள் மாறுதல், ஜூலை 4 முதல் 8 வரை மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் நடக்கின்றன. இதற்கான ஏற்பாடுகள் சி.இ.ஓ., ரேணுகா தலைமையில் செய்யப்பட்டுள்ளது.
சங்கங்கள் வலியுறுத்தல்
கலந்தாய்வில் பங்கேற்கும் ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து பங்கேற்க வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இந்த உத்தரவு ஆசிரியர்களின் அடிப்படை உரிமைக்கு எதிரானது. துறை சார்பில் நடக்கும் கலந்தாய்வுக்கு ஏன் தற்செயல் விடுப்பு எடுக்க வேண்டும். அப்படியென்றால் மே மாதமே நடத்தியிருக்கலாமே. எனவே கலந்தாய்வில் பங்கேற்கும் அனைத்து ஆசிரியர்களுக்கு வேலை நாளாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் கழகம் மாவட்ட தலைவர் தென்கரை முத்துப்பிள்ளை, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொருளாளர் கார்த்திகேயன், தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி தலைவர் செல்வகுமரேசன், செயலாளர் பாரதிசிங்கம், பொருளாளர் தென்னவன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.