/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
தரங்கம்பாடியில் கடலில் மூழ்கி சிறுவன் உள்ளிட்ட 2 பேர் பலி
/
தரங்கம்பாடியில் கடலில் மூழ்கி சிறுவன் உள்ளிட்ட 2 பேர் பலி
தரங்கம்பாடியில் கடலில் மூழ்கி சிறுவன் உள்ளிட்ட 2 பேர் பலி
தரங்கம்பாடியில் கடலில் மூழ்கி சிறுவன் உள்ளிட்ட 2 பேர் பலி
ADDED : ஜன 26, 2024 06:04 PM

மயிலாடுதுறை: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மணிக்கூண்டு அருகே உள்ள வீரபத்திரர் கோவில் தெருவை சேர்ந்த மூர்த்தி மகன் நவீன் குமார்(23) செக்கடி தெருவை சேர்ந்த அரசு பெண்கள் கல்லூரியில் 3ம் ஆண்டு பிகாம் படித்து வரும் குமார் மகள் நிவேதா(19) ஆகிய இருவருக்கும் நேற்று கும்பகோணத்தில் உள்ள கோவில் ஒன்றில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. நிச்சயத்திற்கு வந்த உறவினர்கள் 25 பேர் மணமகன் மணமகளுடன் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரைக்கு வேனில் சுற்றுலா வந்துள்ளனர். கடற்கரையில் நவீன்குமார், நிவேதா மற்றும் கும்பகோணம் நாராயண தெருவை சேர்ந்த பிரகாஷ் மகன் 6ம் வகுப்பு படிக்கும் சிறுவன் சரவணன்(12) ஆகிய மூவரும் கடலில் குளித்தபோது அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். இதனைக் கண்டு உறவினர்கள் சத்தம் போட்டதை அடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கடலோர காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று அலையில் சிக்கிய மூவரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
இதில் நவீன்குமார் மற்றும் சரவணன் இருவரும் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது. இதனை அடுத்து உயிருக்கு போராடிய நிவேதாவை போலீசார் சிகிச்சைக்காக பொறையார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். உயிரிழந்த இரண்டு உடல்களை பிரேத பிரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து தரங்கம்பாடி கடலோர காவல் நிலைய போலீசார் மற்றும் பொறையார் சட்டம் ஒழுங்கு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

