/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
மண்டியிட்டு மனு அளிக்க வந்த விவசாயி மயிலாடுதுரையில் பரபரப்பு
/
மண்டியிட்டு மனு அளிக்க வந்த விவசாயி மயிலாடுதுரையில் பரபரப்பு
மண்டியிட்டு மனு அளிக்க வந்த விவசாயி மயிலாடுதுரையில் பரபரப்பு
மண்டியிட்டு மனு அளிக்க வந்த விவசாயி மயிலாடுதுரையில் பரபரப்பு
ADDED : ஜூன் 27, 2025 03:00 AM

மயிலாடுதுறை:மயிலாடுதுறை கலெக்டர் அலுவலக குறைகேட்டு கூட்டத்தில், விவசாயி ஒருவர் மண்டியிட்டு வந்து மனு அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
மயிலாடுதுறை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம் நடந்தது. பல்வேறு பகுதியில் இருந்து வந்த விவசாயிகள் தங்களது குறைகளை தெரிவித்தனர். அப்போது மாப்படுகை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமலிங்கம் கலெக்டர் அலுவலக வாயிலில் இருந்து கூட்ட அரங்கு வரை மண்டியிட்டு வந்து மயிலாடுதுறை நகரின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பழங்காவிரியை தூர்வார வலியுறுத்தி தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
5க்கு மேற்பட்ட கிராமங்களுக்கு பாசன வசதி வழங்கும் பழங்காவேரி ஆறு தற்போது குப்பை மற்றும் கழிவு நீரால் சூழப்பட்டு இருப்பதால் காவிரி நீர் செல்ல முடியாத நிலை உள்ளது. இது குறித்து பலமுறை புகார் அளித்தம் நடவடிக்கை எடுக்காததால் மண்டியிட்டு மனு அளிக்க வந்ததாக ராமலிங்கம் தெரிவித்தார்.
மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் ஸ்ரீகாந்த் மற்றும் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த எம்.எல்.ஏ., ராஜ்குமார் ஆகியோர், விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதனை ஏற்ற விவசாயி ராமலிங்கம் போராட்டத்தை கைவிட்டு இருக்கையில் அமர்ந்தார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.