/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
கருப்பு கொடி போராட்டம்: 45 பேர் கைது
/
கருப்பு கொடி போராட்டம்: 45 பேர் கைது
ADDED : ஜன 17, 2024 03:20 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் தேரழுந்தூரில் கம்பரின் நினைவாக கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தில் தஞ்சாவூர் கோட்ட ஹிந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் சார்பில் 'அயோத்தி ராமனும், தமிழ் கம்பனும்' என்ற தலைப்பில் இன்று கருத்தரங்கு நடந்தது.
இதில் கலந்து கொள்ள வருகை தந்த கவர்னர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக 45 பேரை போலீசார் கைது செய்தனர்.

