/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
பிரிட்ஜ் கம்ப்ரஸர் வெடித்து மெக்கானிக் தலை சிதறி பலி
/
பிரிட்ஜ் கம்ப்ரஸர் வெடித்து மெக்கானிக் தலை சிதறி பலி
பிரிட்ஜ் கம்ப்ரஸர் வெடித்து மெக்கானிக் தலை சிதறி பலி
பிரிட்ஜ் கம்ப்ரஸர் வெடித்து மெக்கானிக் தலை சிதறி பலி
ADDED : ஜூன் 13, 2025 01:40 AM
மயிலாடுதுறை:மயிலாடுதுறையில் பிரிட்ஜ் கம்ப்ரஸர் வெடித்து மெக்கானிக் பலியானார். காயம் அடைந்த உதவியாளர், சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மயிலாடுதுறை கூறைநாடு திருமஞ்சன வீதியை சேர்ந்தவர் பாலாஜி,53. இவர் மயிலாடுதுறை போஸ்ட் ஆபீஸ் சாலையில் ஏசி, பிரிட்ஜ் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் பழுது நீக்கும் கடை வைத்துள்ளார். இவரது கடையில் மாப்படுகை பகுதியை சேர்ந்த கணேஷ்,26. என்பவர் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று மதியம் பாலாஜி பிரிட்ஜ் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கம்ப்ரஸர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் பாலாஜியின் தலை சிதறியதுடன், கணேஷ் பலத்த காயமடைந்தார்.
இருவரையும் அருகிலிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பாலாஜி பரிதாபமாக உயிரிழந்தார்.
படுகாயமடைந்த கணேஷ் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டுள்ளனர்.