/
உள்ளூர் செய்திகள்
/
நாகப்பட்டினம்
/
மேட்டூரில் தண்ணீர் திறப்பு கடைமடை விவசாயிகள் மகிழ்ச்சி
/
மேட்டூரில் தண்ணீர் திறப்பு கடைமடை விவசாயிகள் மகிழ்ச்சி
மேட்டூரில் தண்ணீர் திறப்பு கடைமடை விவசாயிகள் மகிழ்ச்சி
மேட்டூரில் தண்ணீர் திறப்பு கடைமடை விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : ஜூன் 13, 2025 01:38 AM

நாகப்பட்டினம்,:டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டதையடுத்து, நாகையில் விவசாயிகள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக, மேட்டூர் அணையில் இருந்து நேற்று முதல்வர் ஸ்டாலின் தண்ணீரை திறந்து வைத்தார். இதன் மூலம் 12 டெல்டா மாவட்டங்களில், 17 லட்சம் ஏக்கரில் குறுவை மற்றும் சம்பா, தாளடி சாகுபடி மேற்கொள்ளப்படும்.
காவிரி தண்ணீரை எதிர்பார்த்து விவசாயிகள் சாகுபடிக்கான முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில் தண்ணீர் திறப்பால் மகிழ்ச்சியடைந்த கடைமடை விவசாயிகள், நேற்று நாகை புதிய பஸ் ஸ்டாண்டில் திரண்டனர்.
காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க பொது செயலாளர் தனபாலன் தலைமையில், பட்டாசு வெடித்து, பயணிகளுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.