/
உள்ளூர் செய்திகள்
/
நாகப்பட்டினம்
/
கும்பாபிஷேக விழாவில் முஸ்லிம்கள் பங்கேற்பு
/
கும்பாபிஷேக விழாவில் முஸ்லிம்கள் பங்கேற்பு
ADDED : ஜூன் 06, 2025 02:56 AM

நாகப்பட்டினம்,:நாகையில் நடந்த அதிபத்த நாயனார் கோவில் கும்பாபிஷேக விழாவில், 200க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் சீர்வரிசையுடன் ஊர்வலமாக வந்து பங்கேற்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான அதிபத்த நாயனார், நாகை நம்பியார் நகரில் அவதரித்தவர். அவருக்கு அங்கு புதிதாக கற்கோவில் கட்டப்பட்டது. அங்கு, புதிய ஒளி மாரியம்மன் கோவில், கப்பல் விநாயகர் கோவில் புனரமைக்கப்பட்டது. இக்கோவில்கள் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் தஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்கால், மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் பங்கேற்றனர்.
கும்பாபிஷேக தினமான நேற்று காங்., தேசிய சிறுபான்மை பிரிவு ஒருங்கிணைப்பாளர் மீரா உசேன் தலைமையில், 100 பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள், அங்குள்ள பிள்ளையார் கோவிலில் இருந்து 51 தாம்பூல தட்டுகளில் மங்கள பொருட்கள், பழங்கள், இனிப்புகளை சீர்வரிசையாக எடுத்து சென்றனர். கும்பாபிஷேக நிகழ்ச்சியில், முஸ்லிம்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.