/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
தி.மு.க., சார்பில் ஐம்பெரும் விழா
/
தி.மு.க., சார்பில் ஐம்பெரும் விழா
ADDED : ஜூன் 19, 2024 10:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குமாரபாளையம்: குமாரபாளையம், 13வது வார்டு, தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதி, 101வது பிறந்தநாள் விழா, அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு தங்கப்பதக்கம், ஸ்கூல் பேக் வழங்கும் விழா, ஏழை மாணவ, மாணவியருக்கு கல்வி கட்டணம் வழங்கும் விழா, விளையாட்டு விழா என, ஐம்பெரும் விழா நடந்தது.
வார்டு செயலர் மீனாட்சி சுந்தரம் தலைமை வகித்தார். நகராட்சி தலைவர் விஜய்கண்ணன், மாணவ, மாணவியருக்கு தங்க பதக்கம், ஸ்கூல் பேக், கல்வி கட்டணம், விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.