/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
எளிதில் கற்பிக்க 56 கல்வி செயலி அரசு பள்ளி ஆசிரியர் அசத்தல்
/
எளிதில் கற்பிக்க 56 கல்வி செயலி அரசு பள்ளி ஆசிரியர் அசத்தல்
எளிதில் கற்பிக்க 56 கல்வி செயலி அரசு பள்ளி ஆசிரியர் அசத்தல்
எளிதில் கற்பிக்க 56 கல்வி செயலி அரசு பள்ளி ஆசிரியர் அசத்தல்
ADDED : ஜூலை 05, 2025 02:38 AM

நாமக்கல்:மாணவர்கள், மொபைல் போன் மூலம் எளிய முறையில் கல்வி கற்க வசதியாக, 56 புதிய கல்வி செயலியை, கொல்லிமலை அரசு பள்ளி ஆசிரியர் உருவாக்கியுள்ளார்.
மொபைல் போன் செயலியை பொறியாளர்கள் மட்டுமே உருவாக்க முடியும் என்ற நிலை இருந்தது.
தற்போது, ஆசிரியர்களாலும் செயலிகளை உருவாக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளார் நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை, நத்துக்குழிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் பணியாற்றும் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் சந்திரசேகரன், 56. இவர், புதிய மொபைல் கல்வி செயலியை உருவாக்கி அசத்தியுள்ளார்.
சந்திரசேகரன் கூறியதாவது:
மாணவர்கள் மொபைல் போன்களை தவறாக பயன்படுத்தி வருகின்றனர். அவர்கள் போக்கிலேயே சென்று, அவர்களை மடை மாற்றுவதற்காக புதிய செயலிகளை உருவாக்க முற்பட்டேன்.
அதன்படி, தமிழ், ஆங்கிலம் எழுத்துக்களை அறிந்துகொள்ளவும், வாசிக்கவும் ஒரு செயலி, எளிய முறையில் கணித செயல்பாடுகளை செய்து முடிப்பது, கணித வினாடி - வினா, இலக்கணம் அறிதல், அறிவியல் விதிகளை புரிந்துகொள்ளுதல், விண்வெளி அறிவியல், பறவைகள், விலங்குகளை அறிந்துகொள்ளுதல் என, இதுவரை, 56 மொபைல் கல்வி செயலிகளை உருவாக்கி உள்ளேன்.
மாணவர்களுக்கு எளிய முறையில், அவர்களுக்கு பிடித்த மொபைல் மூலமே பாடம் கற்பிக்க வேண்டும் என்ற நோக்கில், செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலிகள் மற்ற ஆசிரியர்களுக்கும் வழங்கப்படுகிறது.
அவற்றின் மூலம் கற்றல் திறன் எளிமையாக்கப்பட்டுள்ளது. மொபைல் செயலிகளை, ஆசிரியர்கள், மாணவர்கள் உருவாக்கவும் பயிற்சியளிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.