/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
லாரி டிரைவரிடம் பணம் பறிப்பு முகமூடி கொள்ளையர் அட்டகாசம்
/
லாரி டிரைவரிடம் பணம் பறிப்பு முகமூடி கொள்ளையர் அட்டகாசம்
லாரி டிரைவரிடம் பணம் பறிப்பு முகமூடி கொள்ளையர் அட்டகாசம்
லாரி டிரைவரிடம் பணம் பறிப்பு முகமூடி கொள்ளையர் அட்டகாசம்
ADDED : பிப் 06, 2024 10:34 AM
ப.வேலுார்: நாமக்கல், பரமத்தி அருகே முகமூடி கொள்ளையர்கள் லாரி டிரைவரை தாக்கி, 40,000 ரூபாயை பறித்துச் சென்ற
சம்பவத்தால், மற்ற டிரைவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
வேலுார் மாவட்டம், குடியாத்தம் அருகே வீரமாபாளையத்தை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் மகன் சஞ்சய், 21; வாத்து வியாபாரி. இவர், கடந்த சில தினங்களுக்கு முன், லாரியில் வாத்துகளை ஏற்றிக்கொண்டு பரமத்திவேலுார் சென்றுள்ளார்.
குடியாத்தம் பகுதியை சேர்ந்த வாசு, 35, லாரியை ஓட்டினார். மேலும், வாத்துகளை விற்பனை செய்த பணம், 40,000 ரூபாயை கையில் வைத்திருந்தனர்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே கோனுார் கந்தம்பாளையத்தில், லாரிகளை ஓட்டி வரும் டிரைவர்கள், சாலையோரமாக நிறுத்திவிட்டு ஓய்வெடுப்பது வழக்கம். கடந்த, 2ல் இரவு, கந்தம்பாளையத்தில், தேசிய நெடுஞ்சாலையோரம் லாரியை நிறுத்திவிட்டு, டிரைவர் வாசு இயற்கை உபாதை கழிக்க காட்டுப்பகுதிக்கு சென்றார்.
அப்போது, முகமூடி அணிந்து பின்தொடர்ந்து வந்த, 3 கொள்ளையர்கள், டிரைவர் வாசுவை தாக்கி, கத்தியை காட்டி மிரட்டி, 40,000 ரூபாயை பறித்துச் சென்றனர். இதுகுறித்து புகார்படி, பரமத்தி போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனால், மற்ற டிரைவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதுகுறித்து, பரமத்தி வேலுார் டி.எஸ்.பி., ராஜமுரளி கூறியதாவது: லாரி டிரைவரை மிரட்டி பணம் பறித்த மர்ம நபர்களை பிடிக்க, பரமத்தி இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன், எஸ்.ஐ., குமார் தலைமையில், ஆறு பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதியில் உள்ள கேமராக்களை ஆய்வு செய்து வருகிறோம். விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவர். இரவுநேர ரோந்து பணியை தீவிரப்படுத்தியுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.