/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
எள் விதை உற்பத்தி செய்ய வேளாண்துறை அறிவுரை
/
எள் விதை உற்பத்தி செய்ய வேளாண்துறை அறிவுரை
ADDED : ஜூன் 13, 2025 01:36 AM
ராசிபுரம், ராசிபுரம் வேளாண்மை துறை சார்பில், வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது:
எள் விதை உற்பத்திக்கு, தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தில், கடந்த பருவத்தில் பிற மற்றும் அதே ரக பயிர் பயிரிட்டிருக்கக் கூடாது. அவ்வாறு பயிரிட்டிருந்தால், சான்றளிப்பு துறையினரால் சான்றளிக்கப்பட்ட அதே ரகமாக இருக்க வேண்டும். விதை உற்பத்திக்கு, விதை பயிரானது பிற ரகம் மற்றும் சான்று பெறாத அதே ரகத்தில் இருந்து வயலை சுற்றி, 50 மீட்டர் இடைவெளியில் இருக்க வேண்டும்.
தழை, மணி மற்றும் சாம்பல் சதத்தினை ஒரு ெஹக்டேருக்கு, 50:25:25 கிலோ மற்றும் 10 கிலோ மாங்கனீசு சல்பேட்டை அடியுரமாக இட வேண்டும். பூக்கள் பூக்க தொடங்கும் சமயத்தில், 1 சதவீதம் டி.ஏ.பி., கரைசலை தெளிக்க வேண்டும். மீண்டும், 10 நாள் இடைவெளியில் இரண்டாவது தெளிப்பை தெளிக்க வேண்டும்.
அறுவடை செய்த பின் செடிகளை, 3 முதல், 4 நாட்கள் வரை தலைகீழாக வைக்க வேண்டும், செடிகளை வளையக்கூடிய தன்மையுள்ள மூங்கில் தடியினால் அடித்து விதைளை பிரித்தெடுக்கலாம். நல்ல தரமான விதைகளை பெற, 1.6 மி.மீ., வட்ட கண் அளவு சல்லடை கொண்டு சலிக்க வேண்டும். 7-8 சதவீதம் ஈரப்பதம் வரும் வரை நன்கு உலர்த்த வேண்டும்.
காய்ந்த விதைகளை கார்பென்டசிம் மருந்து கொண்டு ஒரு கிலோ விதைக்கு, 2 கிராம் என்ற அளவில், 5 மி.லி., தண்ணீர் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். விதைகளின் ஈரப்பதத்தை, 8 முதல் 9 மாதமாக குறைத்து, பின் சாக்கு அல்லது துணிப்பைகளில் குறுகிய கால சேமிப்பிற்காக 8-9 மாதங்கள் சேமிக்கலாம்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.