/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
/
புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : ஜூன் 01, 2025 01:09 AM
திருச்செங்கோடு, உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, திருச்செங்கோடு நகராட்சி சார்பில் துப்புரவு பணியாளர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது. நகராட்சி சேர்மன் நளினி சுரேஷ்பாபு துவக்கி வைத்தார்.
பழைய பஸ் ஸ்டாண்ட் அண்ணாதுரை சிலை அருகில் இருந்து துவங்கிய பேரணி, வடக்கு ரத வீதி, கிழக்கு ரத வீதி, தெற்கு ரத வீதி வழியாக நகராட்சி அலுவலகத்தை அடைந்தது. பேரணியில், புகை பிடிக்கவோ, புகையிலை பொருட்களை யாதொரு வடிவிலும் உட்கொள்ளவோ மாட்டேன்.
என் நண்பர்கள், உறவினர்களை புகை பிடிக்க ஊக்குவிக்க மாட்டேன். பணியின்போது, சக ஊழியர்களை புகையிலை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க ஊக்குவிப்பேன்.
புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் நோய்களிலிருந்து என் சமுதாயத்தை பாதுகாக்க, பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவேன். 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும், பள்ளி, பொது இடங்களில் புகையிலை பொருட்களை விற்பனை செய்ய அனுமதிக்க மாட்டேன் என, உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.