/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பருத்தி சீசன் தொடக்கம்; ரூ.4 லட்சத்திற்கு ஏலம்
/
பருத்தி சீசன் தொடக்கம்; ரூ.4 லட்சத்திற்கு ஏலம்
ADDED : ஜூலை 16, 2024 01:42 AM
ராசிபுரம்: அக்கரைப்பட்டியில், நேற்று சுரபி ரக பருத்தி ஏலம் தொடங்கியது.
முதல் நாளில், 4 லட்சம் ரூபாய்க்கு பருத்தி விற்பனையானது.ராசிபுரம் சுற்று வட்டார பகுதியில் அதிகளவு பருத்தி பயிரிடப்படுகிறது. இப்பகுதியில் உள்ள பருத்தியை விவசாயிகளிடம் வாங்கி, ஏல முறையில் வியாபாரிகளுக்கு, ஆர்.சி.எம்.எஸ்., என்ற ராசிபுரம் கூட்டுறவு விற்பனை சங்கம் விற்பனை செய்து வருகிறது. பருத்தியை பொறுத்தவரை இப்பகுதியில், ஆ.சி.எச்., சுரபி, கொட்டு ரக பருத்திகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. கடந்த மார்ச்சில் பருத்தி சீசன் முடிவுக்கு வந்தது.வழக்கமாக நவ., டிசம்பர் மாதங்களில் பருத்தி சீசன் தொடங்கும். தற்போது, சுரபி ரகம் மட்டும் இரண்டு மாத அளவிற்கு விளைச்சல் இருக்கும். இந்த பருத்திக்கான விற்பனை நேற்று அக்கரைப்பட்டியில் உள்ள, ஆர்.சி.எம்.எஸ்., கிடங்கில் தொடங்கியது. நேற்று, 115 பருத்தி மூட்டைகள் விற்பனைக்கு வந்திருந்தன. இதில் சுரபி ரகம் குறைந்தபட்ம், 6,999 ரூபாய்க்கும் அதிகபட்சம், 8,089 ரூபாய்க்கும் விற்பனையானது. மொத்தம், 4 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.