ADDED : செப் 29, 2025 02:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையம்:பீஹாரை சேர்ந்தவர் சுமன்குமாரி, 21; இவருக்கு திருமணமாகி, கணவரை பிரிந்து வாழ்கிறார். ஓராண்டாக, பள்ளிப்பாளையம் அருகே, வெப்படை அடுத்த ஆனங்கூர் பகுதியில் வசித்து வரும் தன் பெற்றோருடன் சுமன்குமாரி வசித்து வருகிறார். மேலும், பெற்றோருடன் சேர்ந்து சுமன்குமாரியும், அப்பகுதியில் உள்ள தனியார் நுாற்பாலைக்கு வேலைக்கு சென்று வந்தார்.
இந்நிலையில், சுமன்குமாரி, வீட்டில் எந்த வேலையும் செய்வதில்லை எனக்கூறி, அவரது தாய் திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த சுமன்குமாரி, நேற்று முன்தினம் இரவு வீட்டில் துப்பட்டவால் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து வெப்படை போலீசார் விசாரிக்கின்றனர்.

