/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பா.ஜ., நிர்வாகிகள் சுதேசி உறுதிமொழி ஏற்பு
/
பா.ஜ., நிர்வாகிகள் சுதேசி உறுதிமொழி ஏற்பு
ADDED : செப் 29, 2025 01:52 AM
ராசிபுரம்:பிரதமர் மோடி, மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமை, 'மனதின் குரல்' நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இதை, பொது இடங்களில் அனைவரும் கேட்கும் விதமாக, பா.ஜ.,வினர் ஒலிபரப்பு செய்து வருகின்றனர். அதன்படி, நேற்று, ராசிபுரம் முத்துக்காளிப்பட்டி பஞ்சாயத்தில், 'மனதின் குரல்' நிகழ்ச்சியில், பா.ஜ., நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏரளமானோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி முடிந்த பின், அனைவரும் சுதேதி உறுதி மொழி ஏற்றனர்.
வீட்டிலும், பொது இடத்திலும் வெளிநாட்டு தயாரிப்பு பொருட்களுக்கு பதில், இந்திய தயாரிப்புகளை பயன்படுத்துவோம்; இளைஞர்கள், சிறுவர்கள் என அடுத்த தலைமுறையினருக்கு சுதேசி பொருட்களின் முக்கியத்துவத்தை தெரிவித்து, அவர்களையும் சுதேசி பொருட்களை வாங்க ஊக்குவிப்போம்; நாட்டின் சுற்றுச்சூழலை பாதுகாப்பேன், நம் நாட்டின் சுற்றுலா தலங்களுக்கு முன்னுரிமை அளிப்பேன் என, அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாநில இணை அமைப்பாளர் லோகேந்திரன், விவசாயி அணியின் முன்னாள் மாவட்ட செயலாளர் மணிகண்டன், கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

