/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
திருட்டு சம்பவங்களை தடுக்க வீடுகளிலும் 'சிசிடிவி' பொருத்த வேண்டும்: ஏ.டி.ஜி.பி.,
/
திருட்டு சம்பவங்களை தடுக்க வீடுகளிலும் 'சிசிடிவி' பொருத்த வேண்டும்: ஏ.டி.ஜி.பி.,
திருட்டு சம்பவங்களை தடுக்க வீடுகளிலும் 'சிசிடிவி' பொருத்த வேண்டும்: ஏ.டி.ஜி.பி.,
திருட்டு சம்பவங்களை தடுக்க வீடுகளிலும் 'சிசிடிவி' பொருத்த வேண்டும்: ஏ.டி.ஜி.பி.,
ADDED : செப் 19, 2025 01:51 AM
நாமக்கல், ''திருட்டு சம்பவங்களை தடுக்க, பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும், பொது இடங்களிலும், 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்த வேண்டும்,'' என, போலீஸ் ஏ.டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம் வேண்டுகோள் விடுத்தார்.
நாமக்கல் - பரமத்தி சாலையில் உள்ள ஏ.எஸ்.பி., அலுவலகத்தில், தமிழக ஏ.டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பராமரிப்பு பதிவேடுகளை பார்வையிட்டு, வழக்குகளின் தற்போதைய நிலை குறித்து போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் நடந்த கிட்னி திருட்டு வழக்கு தொடர்பாக, சிபி.சி.ஐ.டி., போலீசார் விசாரித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் இதுவரை, 55 டி.எஸ்.பி., அலுவலகங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இந்த ஆய்வு, இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்களின் பணி தொடர்பாக நடக்கிறது. தமிழகத்தில் சமீபத்தில் போலீசார் மீதான தாக்குதல் சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை.
தாக்குதல் போன்ற சம்பவம் நடந்தால் உரிய பாதுகாப்பும், நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. பாலியல் வன்கொடுமை வழக்குகள் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு, குற்றவாளிகள் கைது செய்யப்படுகின்றனர். இதனால் போக்சோ வழக்குகள் படிப்படியாக குறைந்து வருகின்றன.
கொலை, கொள்ளை, திருட்டு உள்ளிட்ட வழக்குகளில், 'சிசிடிவி' கேமராக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதனால், பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும், பொது இடங்களிலும், 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்த முன் வரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
எஸ்.பி., விமலா, ஏ.எஸ்.பி., ஆகாஷ்ஜோஷி மற்றும் இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட போலீசார் உடனிருந்தனர்.